சிகிரியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னர் பின்னடைவைக் கண்டிருந்த இலங்கையின் சுற்றுலாத்துறை தற்போது மீண்டு வருகின்றது.

பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் வெளிநாடுகள் விதித்திருந்த சுற்றுலாப் பயணிகளுக்கான தடைகளும் நீக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில், அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் சிகிரியாவுக்கு வருகை தருகின்றனர். சிகிரியாவை பார்வையிடுவோரின் எண்ணிக்கையும் தற்போது 70 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு சுற்றலாப்பயணிகள் என்றும் மேற்குலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் மத்திய கலாசார நிதிய சிகிரிய திட்டத்தின் முகாமையாளர் மேஜர் அனுர நிஷாந்த தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக நாளாந்தம் 900இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் பெருமளவில் தற்போது வருகை தருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.