நன்னீர் மீன் வளர்ப்பை மேம்படுத்த நடவடிக்கை!

பாரிய நீர்த்தேக்கங்களில் நன்னீர் மீன் வளர்ப்பை மேம்படுத்த கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 800 ஹெக்டேயருக்கும் அதிக பரப்பில் அமைந்துள்ள பாரிய நீர்த்தேக்கங்களில் முதற்கட்டமாக நன்னீர் மீன் வளர்ப்பை முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் வாழும் மீனவக் குடும்பங்களுக்கு தேவையான மீன்பிடி உபகரணங்களை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.