இலங்கை ஆடை தயாரிப்புகளுக்கு பிரித்தானியா சந்தையில் அதிக வரவேற்பு

பிரித்தானிய சந்தையில் தொடர்ந்தும் இலங்கையின் ஆடை தொழில்துறை ஏற்றுமதிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளதாக இலங்கை வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் 4.7 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தயாரிப்புகளை பிரித்தானியாவுக்கு இலங்கை ஏற்றுமதி செய்துள்ளது.

இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு அறிக்கை என்ற பெயரிலான வெளியீடு ஒன்று முதலீட்டு மற்றும் பிரித்தானிய பேரவையால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வெளியீட்டில் ஆடை தொழில் துறை மூலமான தயாரிப்புகளில் 46 சதவீதமானவை பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2018 இல் பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் ஆடை தொழில்துறை முதன்மை வகிக்கின்றது. எனினும் மொத்த ஏற்றுமதியில் 75 சதவீதமானவை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

2014 ஆம் ஆண்டில் 903 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆடை தயாரிப்பு ஏற்றுமதிகள் பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இத் தொகை 2015 ஆம் ஆண்டு 815 மில்லியனாக குறைவடைந்துள்ளது.

இருப்பினும் ஐரோப்பிய சந்தைகள் மத்தியில் இலங்கை தயாரிப்புக்கு முக்கிய இடம் கிடைத்து வருகின்றது. மரக்கறிகள் பிளாஸ்டிக், இறப்பர் மற்றும் இயந்திர கைத்தொழில் துறைப் பொருட்களுக்கும் பிரித்தானிய சந்தையில் நல்ல வரவேற்பு காணப்படுகின்றது.