Dell Technologies இன் அதிநவீன தொழிற்பாடு அறிமுகம்

சந்தை முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்ற Dell Technologies, edge, core மற்றும் cloud என தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பினை முற்றிலும் மாற்றியமைப்பதற்கு தயாராகவுள்ள அதிநவீன தொழிற்படை மற்றும் உட்கட்டமைப்புத் தீர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்தவகையில் கொழும்பில் ஷங்கிரி-லா ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் புதிய தீர்வுகளை அறிமுகப்படுத்தி வைத்துள்ளனர்.

மின்கலத்தின் பாவனை, தேக்கக பயன்பாடு, இடம் நகரும் தேவைப்பாடுகள் மற்றும் பெரும்பாலும் உபயோகிக்கின்ற பயன்பாடுகள் (applications) தொடர்பில் பணியாளர் எவ்வாறு தனது PC இனை உபயோகிக்கின்றார் என்பதைக் கண்டறியும் ஆழமான விபரங்களை தரவின் மூலமாக பெற்றுக்கொள்ள முடிவதுடன், அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு ஊழியருக்கும் உகந்த PC மற்றும் பயன்பாடுகளை வாடிக்கையாளர்கள் தெரிவு செய்துகொள்வதற்கு DellTechnologies இனால் உதவ முடியும்.

அந்த வகையில் Dell தொழிற்சாலையில் முற்கூட்டியே கட்டமைப்புச் செய்யப்பட்ட சாதனங்களை நேரடியாக இறக்குமதி செய்து கொள்ள வாடிக்கையாளர்களுக்கு இடமளிக்கின்றது.

தரவினால் வழிநடாத்திச் செல்லப்படுகின்ற, குறைந்தளவு மனித தலையீடு கொண்ட அனுபவமானது தகவல் தொழில்நுட்ப நேரம் மற்றும் பணத்தை மீதப்படுத்திக் கொள்ள உதவி, தமது வளங்களை ஏனைய மூலோபாய செயற்திட்டங்கள் மீது கவனம் செலுத்த அவர்களுக்கு இடமளித்து, பணியாளர்களுக்கு பிரத்தியேகமயப்படுத்தப்பட்ட சாதனங்களைக் கொண்டிருக்க உதவுகின்றது.

அத்துடன் தரவு மற்றும் பயன்பாடுகளை அவர்கள் அடையப் பெற்று, அவர்கள் சாதனங்களின் பயன்பாட்டை ஆரம்பிக்கும் போது எவ்விதமான தடங்கல்களுமின்றி உடனடியாகவே பணியைச் செவ்வனே முன்னெடுக்க முடியும்.

Dell Technologies (NYSE:DELL) ஆனது நிறுவனங்கள் மற்றும் மக்கள் தமது டிஜிட்டல் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பி, தாங்கள் பணிகளையும், வாழ்வையும் முன்னெடுக்கும் வழிமுறைகளை வளர்ச்சி காணச் செய்ய உதவுகின்றது.

edge, core மற்றும் cloud என தொழிற்துறையின் விசாலமான மற்றும் மிகவும் புத்தாக்கமான தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது.

Dell, Dell EMC, Pivotal, RSA, Secureworks, Virtustream மற்றும் VMware ஆகியன Dell Technologies குடும்பத்தில் அடங்கியுள்ளன.

Dell Technologies இன் முக்கிய பங்காளர்களான Pinnacle Distribution Lanka Pvt Ltd மற்றும் REDINGTON SL (PVT) Ltd ஆகிய நிறுவனங்கள் இந்நிகழ்விற்கு வலுவூட்டியுள்ளன.

உலகெங்கிலும் 5 சதவீதமான நிறுவனங்கள் மட்டுமே டிஜிட்டல் முன்னோடிகள் என கணிக்கப்படுவதாக Dell Technologies டிஜிட்டல் வளர்ச்சி மாற்றச் சுட்டெண் காண்பிக்கின்றது.

Gartner முன்னெடுத்துள்ள ஆய்வொன்றின் மூலமாக, 2020 ஆம் ஆண்டளவில் டிஜிட்டல்ரீதியான வளர்ச்சி மாற்றம் காணாவிட்டால் தமது நிறுவனம் போட்டித்திறன் அனுகூலத்தை இழக்க நேரிடும் என 67 சதவீதமான வர்த்தகத்துறை தலைவர்கள் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அனேகமான நிறுவனங்களுக்கான டிஜிட்டல் வளர்ச்சி மாற்ற நிகழ்ச்சித்திட்டங்கள் இன்னமும் ஆரம்ப கட்டங்களிலேயே காணப்படுவதாகவும் அந்த ஆய்வு புலப்படுத்தியுள்ளது.