கோதுமை மா – பால் மாவுக்கு விலை பட்டியல் அறிமுகம்

கோதுமை மா மற்றும் பால் மாவுக்கான விலை பட்டியல் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்ககள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் பால் மா மற்றும் கோதுமை மா நிறுவனங்களுக்கு தாம் விரும்பிய வகையில் விலைகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு முடியாதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அதிகரித்த கோதுமை மாவின் விலையை வரையில் விளக்கி கொள்ளுமாறு குறித்த நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், விலை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவை மற்றும் வாழ்க்கை செலவு குழுவும் இது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அதேநேரம் எந்தவித அறிவிப்பும் இன்றி மேற்கொள்ளப்பட்ட கோதுமை மாவின் விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் முற்றுகை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் அதிக விலைக்கு கோதுமை மாவை விற்பனை செய்த சுமார் 100 வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.