இலங்கையில் Xiaomi இன் Mi 9T மற்றும் Redmi 7Aவகை கைத்தொலைபேசிகள் அறிமுகம்

Xiaomi இலங்கையில் Mi 9T மற்றும் Redmi 7Aவகை கைத்தொலைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது.

Mi 9T Qualcomm® SnapdragonTM , AI 48MP மூன்று கமராக்கள் மற்றும் அழகிய நெருப்பு மற்றும் பனி வடிவங்களை உள்ளடக்கிய கறுப்பு நிறக்கண்ணாடி.

Redmi 7A ஸ்மார்ட் போனானது 12 MP (மெகாபிக்ஸல்) சொனி IMX486 கமரா சென்சர் மற்றும் 4000mAh battery இரண்டு நாட்கள் ஆயுள்காலத்தைக் கொண்டதாகும்.

Xiaomi, உலக புகழ் பெற்ற தொழில்நுட்ப துறையின் ஜாம்பவான் Xiaomi நிறுவனமானது Mi 9 குடும்பத்தைச் சேர்ந்த Mi 9T வகை தொலைபேசிகளை இலங்கை சந்தையில் அதிரடியாக அறிமுகம் செய்வதை அறிவிக்கிறது.

Xiaomi நிறுவனமானது Redmi 7A ஸ்மார்ட் போன் இரண்டு நாட்கள் ஆயுள்காலத்தைக் கொண்டதோடு 12 மெகா பிக்ஸல் சொனி IMX486 கமரா சென்சர்களை கொண்டதாகும்.

இலங்கை, Xiaomi இந்தியாவின் பொது முகாமையாளர் வித்யா சாகர் தெரிவிக்கையில்,

இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய Mi 9T மற்றும் Redmi 7A கைத்தொலைபேசி வகைகளை அதிரடியாக நாங்கள் அறிமுகம் செய்கின்றோம். 730 புரோசர் மற்றும் 20 எம்.பி. பொப் அப் செல்பி கமரா என்பனவற்றை கொண்டது.

Redmi 7A என்ற இந்த கைத்தொலைபேசி சொனி வகையை சேர்ந்த சென்சர் கமரா அனுபவத்தை தருவதோடு நான்காயிரம் battery வலுவை கொண்டதாகும். இது Redmi A வகையை சேர்ந்த ஸ்மார்ட் போன்களுக்கு அறிமுகம் செய்யப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இந்த சிறப்பான வசதிகளுடன் இரண்டு ஸ்மார்ட் போன்களும் சிறந்த கண்டுபிடிப்பு தொழில்நுட்பத்துடன் நியாயமான விலையில் எம்.ஐ. வாடிக்கையாளர்களுக்கு இலங்கையில் கிடைக்கிறது என்று கூறினார்”

Mi 9T முழுமையான சக்தி

Qualcomm® SnapdragonTM 730 சிபியு மற்றும் ஜிபியு செயற்பாடுகள்

470 சிப் ப்ரோஸஸர்களைக் கொண்ட SnapdragonTM 710 என்ற கைத்தொலைபேசியுடன் ஒப்பிடும் போது இது 40 சதவீத சிபியு அதிகரிப்பை வழங்குகிறது. octa-core Kryo சிப் ப்ரோஸஸர் ஆனது வினைத்திறனான ஆழமான மின்சேமிப்பை கொண்டதாகும். இந்த ஸ்மார்ட் போன் ஆனது Turbo 2.0 கேம் அனுபவத்துடன் தொடுகை முறை, டிஸ்ப்ளே, ஒலித்தரம், வலையமைப்பு மற்றும் இன் கேம் அழைப்பு வசதிகளும் உண்டு தொழில்நுட்பத்துடன் கூடிய முழுத்திரை மற்றும் தனித்துவமான வளைந்த சுடர் வடிவிலான பின்புறக் கண்ணாடி Mi 9T வசதியானது 16.2cm (6.39) 19.5:9 full HD AMOLED முழுத்திரையைக் கொண்டதோடு எல்லாப் பக்கங்களும் குறைந்த பெசல்களைக் கொண்டதாகும். ஜேர்மன் நாட்டின் VDE பரிசோதனை நிறுவனத்தினால் பரிசோதிக்கப்பட்டு கண்களுக்கு பாதுகாப்பான குறைந்த நீல வெளிச்சத்திற்கான சான்றிதழை பெற்றுள்ளது. பாகங்கள் 7 ஆம் தலைமுறைக்குரிய கைவிரல் அடையாளத் தொழில்நுட்பத்தையும் கொண்டதாகும். nano-holographic தொழில்நுட்பமானது தனித்துவமான வளைந்த சுடர்வடிவிலான நான்கு பக்கங்களும் பாதுகாக்கப்பட்ட கண்ணாடியை கொண்டது. மூன்றாந் தலைமுறை கண்ணாடியுடன் கலந்த குறுகிய சட்டகத்தைக் கொண்ட இந்த கைத்தொலைபேசி கைகளுக்கு மிகவும் இலகுவான Gorilla® Glass 5 இரண்டு பக்கங்களிளும் கொண்டுள்ளது.

48 மொகா பிக்ஸல் மற்றும் 20 மெகா பிக்ஸல் pop-up front கமரா

மூன்று கமரா வசதிகளை வழங்குகிறது. Mi 9T யின் பிரதான வசதியானது 48 மெகா பிக்ஸல் சொன்p IMX582 கமரா சென்சர்களை கொண்டதாகும். இதன் மூலம் மிகவும் துல்லியமான படங்களை எடுக்கலாம். மிகக்குறைந்த வெளிச்சத்திலும் உயர்த்தரத்திலான புகைப்படங்ளை 1.6μm பிக்ஸலில் பெற்றுக்கொள்ள முடியும்.

48 மொகா பிக்ஸல் கமராவுக்கு மேலதிகமாக Mi 9T ஆனது 13 மெகா பிக்ஸல் அகண்ட வில்லையானது 124.8 பாகைக்கொண்ட கமரா பிக்ஸல் வில்லையானது 2x சூம் வசதியைக் கொண்டது.

Mi 9T sports 20 மெகா பிக்ஸல் pop-up front கமரா நீல நிற கண்ணாடி கவரைக் கொண்டதாகும்.

குழு செல்பியை பனரோம வடிவில் மேற்கொள்ள முடிவதோடு 20 மெகா பிக்ஸல் செல்பி கமராவானது ஒரே பிடிப்பில் உங்களையும் உங்கள் நண்பர்களையும் உள்ளடக்கும் வகையில் புகைப்படம் எடுக்கக் கூடியது.

Redmi 7A- பெரிய battery , விரைவான செயற்திறன்..

Redmi 6A battery ஒட்டுமொத்த தரத்தையும் உள்ளடக்கியதாக Redmi 7A battery அமைக்கப்பட்டுள்ளது. 17,999 ரூபா என்ற ஆரம்ப விலையிலிருந்து ஆரம்பமாகும் இந்த டbattery ஆனது 2.0 ஜிகா ஹேர்ட்ஸ் கொள்ளளவுடையது 439 ரக சக்திவாய்ந்த Qualcomm® SnapdragonTM சிப்செட்டைக் கொண்டுள்ளது.

இது இரண்டு நாள் வரையான ஆயுட் காலத்தை உறுதிப்படுத்தும் 4000mAh கொள்ளளவுடைய ஒரு பெரிய battery ஐ கொண்டுள்ளது. Redmi 7A ஆனது 12 மெகா பிக்ஸலைக் கொண்ட Sony IMX486 கமரா சென்சரைக் கொண்டதாகும். முன்பக்கம் 5 மெகா பிக்ஸலைக்கொண்ட AI வடிவத்தில் செல்பிக்களை எடுத்துக்கொள்ளலாம்

Redmi 7A ஆனது வயர்லஸ் எப் எம் வானொலியை இயர்போன் இல்லாமல் இயக்கக்கூடிய வசதி கொண்டது. 13.8cm (5.45) 18:9. HD மற்றும் முழு திரை வசதியுடன் கூடிய முழுமையான பார்வை வடிவத்தை கொண்டதாகும். Redmi 7A ஸ்மார்ட் போன் இரட்டை சிம் வசதியை கொண்டதோடு 256GB கொள்ளவைக் கொண்ட மைக்ரோ SD கார்டை பயன்படுத்தவும் முடியும். இரட்டை VoLTE வசதிகளும் இதில் அடங்கியுள்ளன. கீழே விழுந்து உடைவதைத் தவிர்க்கும் பாதுகாப்பு வலையத்தை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

விலையும், பெற்றுக்கொள்ளும் முறையும்

6GB+128GB வலுகொண்ட Mi 9T ஸ்மாட் போன் இரண்டு நிறங்களைக் கொண்டது கார்பன் கறுப்பு நிறத்திலும், பனிப்பாறை நீல நிறத்திலும் கிடைக்கும். இதன் விலை 59,999 இலங்கை ரூபா.

2GB+32GB கொள்ளளவுடைய Redmi 7A ஸ்மார்ட் போன் மேட் கறுப்பு, மேட் நீல நிறங்களைக் கொண்டது. இதனை 17,999 இலங்கை ரூபாவுக்குப் பெற்றுக்கொள்ளலாம். அங்கீகாரம் பெற்ற Mi பங்குதாரர்களிடமிருந்தும் தெரிவு செய்யப்பட்ட மொபிடல் கூடங்கள் மற்றும் Daraz.com இடம் இருந்தும் இம் மாதம் 22 ஆம் திகதி முதல் பெற்றுக்கொள்ளலாம்.

Xiaomi கூட்டுத்தாபனம் பற்றியது

Xiaomi கூட்டுத்தாபனம் 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உருவாக்கப்பட்டதோடு ஹொங்கொங் பங்கு பரிவர்த்தனையில் 2018 ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி பிரதான நிறுவனமாக இடம்பிடித்தது. இந்த நிறுவமானது இணையத்தள கம்பனி என்பதோடு ஸ்மார்ட் போன் மற்றும் ஸ்மார்ட் வன்பொருட்களையும் வழங்குகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு நட்பு ரீதியாகவும் அவர்களின் உள்ளங்களை குளிர்விக்கும் நிறுவனமாகவும் திகழ்கிறது.

தரம், வினைத்திறன் என்பனவற்றுடன் புதிய கண்டுபிடிப்புக்களை அறிமுகம் செய்ய இந்த நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. இது உலகின் நான்காவது பெரிய ஸ்மார்ட் போன் குறியீடாக இருப்பதோடு உலகின் மிகப்பெரிய IoT தளமாகவும் காணப்படுகிறது.

100 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட் பாகங்களுடன் (ஸ்மார்ட் போன் மற்றும் லப்டொப்) இது தொடர்புபடுகிறது. இந்த உற்பத்தியானது 70 நாடுகள் மற்றும் பிராந்திய சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

Xiaomi இந்தியா நிறுவனமானது 2018ம் ஆண்டில் மூன்றாவது காலாண்டு முதல் தொடர்ந்தும் நான்காவது முறையாக ஸ்மார்ட் போன் முக்கியஸ்தராக திகழ்கிறது.

Xiaomi இந்தியா நிறுவனமானது உலகலாவிய ரீதியில் 2018 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு முதல் சிறந்த தொலைக்காட்சி குறியீட்டு நாமமாக IDC உலகத்தரப்படுத்தல் கண்காணிப்பகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.