சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வழமைக்கு திரும்பும் அறுகம்பை

இலங்கை சுற்­று­லாத்­து­றையின் சொர்க்க புரி­யாகத் திகழும் அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள பொத்­துவில்- அறு­கம்பை கடற்­கரைப் பிர­தேசம் மீண்டும் சுற்­றுலாப் பய­ணி­களின் வரு­கை­யினால் களை­கட்டத் தொடங்­கி­யுள்­ளது.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தலின் பின்னர் இலங்­கையின் சுற்­று­லாத்­துறை வெகு­வாகப் பாதிக்­கப்­பட்­டி­ருந்து. இதனால் பிர­சித்தி பெற்ற சுற்­றுலாப் பிர­தே­சங்­களில் ஒன்­றான அறு­கம்பை பிர­தேசம் ஸ்தம்­பி­த­மான நிலையில் காணப்­பட்­டி­ருந்­தது.

தாக்­குதல் சம்­பவம் இடம்­பெற்று மூன்று மாதங்கள் கடந்த நிலையில், மீண்டும் அறு­கம்பை பிர­தே­சத்தை நோக்கி வரு­கின்ற உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணி­களின் வருகை அதி­க­ரிக்கத் தொடங்­கி­யுள்­ளது. இது­வொரு ஆரோக்­கி­ய­மான விட­ய­மாகும். இந்த நிலைமை மேலும் அதி­க­ரித்து சுற்­று­லாத்­து­றையின் வரு­மா­னத்தை அதி­க­ரிக்கச் செய்யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு ­கின்­றது. அம்­பாறை மாவட்­டத்தின் அறு­கம்பை குடாக்­க­ரை­யா­னது, உலகப் புகழ்­பெற்ற கட­லலை நீர்ச்­ச­றுக்கல் (சேர்பிங்) விளை­யாட்­டுக்கு மிகவும் பிர­சித்தி பெற்ற ஓரி­ட­மாக­காணப்படுவதுடன் இது உலகில் 10 ஆவது இடத்­திற்குள் இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

மாவட்­டத்தில் இத­னுடன் அண்­டிய மற்­று­மொரு சுற்­றுலாப் பிர­தே­ச­மாக குமண வன­வி­லங்கு சார­ணா­லயம் அமைந்­துள்­ளமை மற்றும் சுற்­று­லாத்­து­றை­யி­னரை ஈர்க்கும் வகை­யி­லான கலா­சார பாரம்பரி­யங்கள், உணவு உற்­பத்­திகள், வனங்கள், மலைகள், குளங்கள், ஏரிகள், களப்­புகள், கடல் என அத்­தனை இயற்கை வளங்­களும் இப்­பி­ர­தே­சங்­களில் நிறைந்து காணப்­ப­டு­வது இங்கு வரும் சுற்­றுலாப் பய­ணி­களை ‍வெகு­வாக கவர்ந்­துள்­ளது எனலாம்.

பயங்­க­ர­வாதத் தாக்­குதல் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டி­ருந்த சுற்­று­லாத்­து­றையை மிக விரை­வாக வழ­மைக்கு கொண்டு வர­ுவ­தற்கு இலங்கை சுற்­றுலாத்துறை அமைச்சும் அர­சாங்­கமும் கடு­மை­யான பிர­யத்­த­னங்­களை முன்­னெ­டுத்து வந்­ததன் பல­னா­கவே இன்று சுற்­று­லாத்­துறை வழ­மைக்கு திரும்பக் கார­ண­மாக அமைந்­தது என இலங்கை சுற்­றுலா, கைத்­தொழில் மன்றத் தலைவர் ஏ.எம்.ஜௌபர் தெரி­வித்தார்.

சுற்­று­லாத்­துறையை மாத்­திரம் நம்பி தொழில் புரிந்து வரு­கின்ற பொத்­துவில் அறு­கம்பை ஹோட்டல் உரி­மை­யா­ளர்கள் மற்றும் ஏனைய தொழி­லா­ளர்கள் கடந்த குண்டுத் தாக்­கு­தலின் கார­ண­மாக அதிகம் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தனர். இத்­தாக்­குதல் கார­ண­மாக அதி­க­ள­வி­லான வெளி­நாட்டு மற்றும் உள்­நாட்டு சுற்­று­லாப் பய­ணிகள் அறு­கம்பை பிரதே­சத்­தி­லி­ருந்து வெளி­யேறி இருந்­தனர். இதனால் சுற்­றுலாத் தொழில்துறை மூலம் எதிர்­பார்த்த வரு­மா­னத்தை ஈட்ட முடி­யாது பெரும் கஷ்­ட­மான நிலைக்கு முகம்­கொ­டுத்­து­ வந்­தி­ருந்­தனர்.

பயங்­க­ர­வாத தாக்குதல்களை அடுத்து துரிதமாக நாட்டின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தியது. அதன் விளைவாகவே மீண்டும் சுற்றுலாப் பயணிகள் அச்சமின்றி இலங்கைக்கு வரத்தொடங்கியுள்ளனர். இத னால் சுற்றுலாத்துறையை நம்பி தமது வாழ் வாதாரத்தை மேற்கொண்டு வந்த பலர் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்றார்.