ஏற்றுமதி பெறுகைகள் தொடர்பில் வங்கியின் புதிய விதிகள்

ஏற்றுமதி பெறுகைகளை மாற்றுதல் தொடர்பில் மத்திய வங்கி புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தப் புதிய விதிகள் இலங்கையில் பொருட்கள் மற்றும் பணிகள் தொடர்பான ஏற்றுமதி செயற்பாடுகளை மேற்கொள்ளும் இருசாராருக்கும் ஏற்புடையதாகும்.

இதற்கமைய, அதிகாரமளிக்கப்பட்ட கொடுப்பனவுகளை நிறைவேற்றும்போது, எஞ்சியுள்ளவற்றை தொடர்ந்துவருகின்ற மாதத்தின் ஏழாவது நாளன்று அல்லது அதற்கு முன்னர் இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கு ஏற்றுமதியாளர்களை இந்த விதிகள் வேண்டுவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

நடைமுறைக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் வெளிமுக பண அனுப்பல்கள், அனுமதிக்கப்பட்டவாறான வெளிநாட்டு நாணயத்தாள்களில் மீளெடுப்பு, வெளிநாட்டு நாணயப் படுகடன் தீர்ப்பனவுச் செலவுகள் அத்துடன் மீள்கொடுப்பனவு, ஒரு மாத கடமைப்பொறுப்புகள் உள்ளடங்கலாக பொருட்களைக் கொள்வனவு செய்தல் மற்றும் பணிகளைப் பெற்றுக்கொள்ளல், அவ்வாறு கிடைக்கப்பெற்ற ஏற்றுமதிப் பெறுகைகளின் பத்து சதவீதம்வரை வெளிநாட்டு நாணயத்தில் இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பிலான கொடுப்பனவுகள் என்பன புதிய விதிமுறைகளாகும்.

அதற்கமைய குறித்த விதிகள் வழங்கப்பட்டதன் மூலம், தமது ஏற்றுமதிப் பெறுகைகளிலிருந்து பொருட்கள் மற்றும் பணிகள் ஏற்றுமதிகள் தொடர்பிலான அனைத்து செலவினத்தையும் நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏற்றுமதியாளர்களுக்கு இயலுமானதாக இருக்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

⏰ யாழில் இருந்து உங்கள் தாரணி சூப்பர்மார்கெட்  24_மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!!