உணவு விற்பனை நிலையங்களூடாக 600 ​பெண்களுக்கு வேலைவாய்ப்பு

பாரம்பரிய உணவு விற்பனை நிலையங்களூடாக 600 ​பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை 10 மாவட்டங்களில் 22 பாரம்பரிய உணவு விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மாகாண விவசாய திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் 60 வரையிலான பாரம்பரிய உணவு விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.