சோபை இழந்த நிலையில் சுற்றுலாத்தளங்கள்

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பின்னர் இலங்கைக்கு வருகை தரும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைவடைந்துள்ளது.

இதனால் சுற்றுலாத்துறையை வாழ்வாதாரமாக மேற்கொண்ட பலரது வருமானங்களும் இன்று பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளன.

ஹோட்டல்துறை மற்றும் சிறு வியாபாரங்கள் என சுற்றுலாத்துறைசார் தொழிலாளர்களும் ஜீவனோபாயத்தினை இழந்துள்ளனர்.

நாட்டிற்கு வருகை தரும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கிழக்கு மாகாணத்திலுள்ள கடற்கரைகளுக்கு சஞ்சரிக்கின்றமை வழமை.

திருகோணமலை மாவட்டத்தில் இன்று சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைவடைந்துள்ளது.

சுற்றுலாத்தளங்கள் அனைத்தும் இன்று சோபை இழந்த நிலையில் காட்சியளிக்கின்றன.

அதிகளவிலான வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்ற இந்த காலப்பகுதியில், நிலாவௌி கடற்கரையில் ஓரிரு வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மாத்திரமே காண முடிந்தது.

சுற்றுலாப் பயணிகளின் சஞ்சரிப்பற்ற நிலையில், வெறிச்சோடி கிண்ணியா கடற்கரை காட்சியளிக்கின்றது.