மூன்று வகை அரிசிக்கான நிர்ணயவிலை அறிவிப்பு

மூன்று வகையான அரிசிக்கு இன்று (03ஆம் திகதி) நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி கடந்த 31ஆம் திகதி வௌியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, வௌ்ளை சம்பாவிற்கான அதிகபட்ச சில்லரை விலையாக 85 ரூபாவும் ஒரு கிலோகிராம் வௌ்ளை நாட்டரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலையாக 80 ரூபாவும் சிவப்பு நாட்டரிக்கான அதிகபட்ச சில்லரை விலையாக 74 ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிய நிர்ணய விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

அதேநேரம், இது தொடர்பிலான முறைப்பாடுகளை 1977 என்ற துரித இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.