விதை வகைகள் சிலவற்றை இறக்குமதி செய்வதை இடைநிறுத்த தீர்மானம்

விதை வகைகள் சிலவற்றை இறக்குமதி செய்வதை இடைநிறுத்துவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

விவசாய அமைச்சர் பி.ஹரிசனின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சோளம், கௌப்பி, பயறு, குரக்கன், எள்ளு, நிலக்கடலை, சோயா, போஞ்சி மற்றும் வெங்காயம் உள்ளிட்ட விதைகளை இறக்குமதி செய்வதற்கு வரையறை விதிக்கப்படவுள்ளதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி W.M.W. வீரக்கோன் குறிப்பிட்டார்.

இந்த விதைகளுக்கான இறக்குமதிக்கு வரையறை விதிப்பதனூடாக இறக்குமதிக்கான வரியை அதிகரிக்கவும், இறக்குமதி அனுமதிப்பத்திர விநியோகத்தை வரையறுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.