கொள்கை வட்டி வீதத்தைக் குறைக்க மத்திய வங்கி தீர்மானம்

கொள்கை வட்டி வீதத்தைக் குறைப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

நேற்று (30) நடைபெற்ற நிதிச்சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம், துணைநில் வைப்பு வசதி வீதம் 7.5 வீதமாகவும் துணைநில் கடன் வசதி வீதம் 8.5 வீதமாகவும் குறைக்கப்படவுள்ளது.

நியதி ஒதுக்கு வீதம் 5 வீதமாகவே காணப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சந்தையில் வட்டி வீதத்தில் குறைவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.