செத்தல் மிளகாய்க்கான கேள்வி அதிகரிப்பு

உள்ளூர் சந்தைகளில் செத்தல் மிளகாய்க்கான கேள்வி அதிகரித்துள்ளதால், மிளகாய் உற்பத்தியை விஸ்தரிப்பற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்காக வரண்ட வலயத்தில் மிளகாய் உற்பத்தி கிராமங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அநுராதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே மிளகாய் உற்பத்தி கிராமம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.