ஏப்ரல் மாதத்தில் வாகன பதிவு வீழ்ச்சி

கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் புதிய வாகனங்களின் பதிவு 18 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன் படி கடந்த ஏப்ரல் மாதம் 28,599 வாகனங்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இத் தொகையானது கடந்த மார்ச் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 35,150 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 18 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதே போல் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 41,151 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இத் தொகை 30 சதவீத வீழ்ச்சியையும் வெளிக்காட்டியுள்ளது.

இதன் படி இக்காலப்பகுதியில் இலங்கையின் வாகனப்பதிவில் முன்னிலை வகிக்கும் மோட்டார் சைக்கிளின் பதிவும் கடந்த மார்ச் மாதத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த 26,851 இல் இருந்து 22,753 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அதே போன்றே கடந்த மார்ச் மாதத்தில் 2,960 ஆக பதிவாகியிருந்த மோட்டார் காரின் எண்ணிக்கையும் ஏப்ரல் மாத்தில் 2,120 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

மேலும் BMW i8 ரகத்தை சார்ந்த ஒரே ஒரு அதி சொகுசு வாகனம் மாத்திரமே இக்காலப்பகுதியில்பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.